Atchaya Saving Scheme:-

தங்கம். அனைவரும் இதை ஒரு மதிப்பு மிக்க பொருளாகவே கருதுகிறார்கள்.

அனைத்து சுபகாரியங்களில் தங்கத்தை அணிவது என்பது சிறப்பான ஒன்றாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல நெருக்கடியான காலங்களில் தங்கம் நமக்கு உடனடியான பலனைத் தருகிறது. இதனாலேயே இதன்மீது இருக்கும் மதிப்பு இன்று பலமடங்கு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இன்று மட்டுமல்ல என்றுமே தங்கத்தின் முதலீடு என்பது பன்மடங்கு பயனைத்தரும். மதிப்பு மிக்க தங்கத்தை அனைவரும் எளிய முறையில் சேமித்திட இதோ மங்கள் & மங்கள் புதுமையான சேமிப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது .இதன் மூலம் இனி தங்கத்தை சேமிப்பதும் எளிது .வாங்குவதும் எளிது .

மங்கள் & மங்களின் அட்சய தங்கநகை சேமிப்புத்திட்டம் :

இத்திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணம் அன்றைய தங்க நிலவரத்தின்படி தங்கமாக கணக்கில் வைக்கப்படும் . 15மாத இறுதியில் நீங்கள் செலுத்தியிருக்கும் பணத்தின் மதிப்பிற்கேற்ப தங்கத்தின் அளவும் இருக்கும்.

தங்கத்தின் அன்றைய நிலவரம்செலுத்தும்தொகைசேமிக்கும்தங்கத்தின்அளவு
4,000 10,000 2.500 கிராம்
4,000 5,000 1.250 கிராம்
4,000 2,000 0.500 கிராம்
4,000 1,000 0.250 கிராம்
தங்க எடை குவிந்தது 25 கிராம் 25 கிராம்
தங்க நகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன 25 கிராம் 35 கிராம்
எடை உள்ள வேறுபாடு இல்லை 10 கிராம்
VA இல்லை உள்ளது 
GST  இல்லை உள்ளது 

விதிமுறைகள்

இந்த திட்டத்தின் மூலம் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி 15 மாதங்கள் முழுமையாக முடிந்தபின் உறுப்பினர்களின் கணக்கில் சேர்ந்துள்ள எடைக்கு தங்க நகை பெற்றுக்கொள்ளலாம் . மாதாந்திர குறைந்த பட்ச தவணை ரூ.1000/- , ரூ.2000/- , ரூ.5000/-, ரூ.10000/- ஆகும்

இத்திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு உண்டு. மாதாந்திர தவணைத் தொகை பிரதிமாதம் தவறாமல் செலுத்தப்படவேண்டும். தவணை தொகையை தவறாமல் செலுத்துவோருக்கு மட்டுமே திட்டத்தின் சலுகைகள் பொருந்தும் .

மாதத் தவணையை செலுத்தத் தவறினால் தாமதமாக செலுத்தும் காலத்திற்கேற்ப திட்டம் முடிவு காலமும் தாமதமாகும் .

பலவிதமான சேதாரங்களில் நகைகள் எடுத்தால் சராசரி  கணக்குப்படிதான் சேதாரம் கணக்கிடப்படும் .

தவணை செலுத்தப்படுகின்ற தேதியில் தங்க நகைச்  சங்க விலை நிலவரப்படி உறுப்பினர்கள் கணக்கில் தங்கம் வரவு வைக்கப்படும் .15 மாதம் முழுமையாக தவணைத் தொகை செலுத்தியபின் உறுப்பினர்கள் கணக்கில் உள்ள எடைக்கு செய்கூலி , சேதாரம் இல்லாமல் தங்கள் விருப்பம்போல் தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம். உறுப்பினர்கள் கணக்கில் உள்ள எடைக்கு கூடுதலாக நகைகள் வாங்கினால் தங்கள் கணக்கில் உள்ள எடை போக மீதமுள்ள எடைக்கு சேதாரம், GST கணக்கிடப்படும் .

இத்திட்டத்தில் தங்க நகைகள், தங்க காசுகள் (முத்திரை பவுன்) மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் . செய்கூலி இல்லை, சேதாரம், GST இல்லை என்ற சலுகை தங்க நகைகள், தங்க காசுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வெள்ளி பொருட்கள் ,வைர நகைகள் மற்றும் பிளாட்டின நகைகள் தேவையானால் கட்டிய தொகையாகவே கணக்கிடப்படும் . கட்டிய தொகையாக கணக்கிடும் பட்சத்தில் போனஸ் தொகை சேர்த்து கணக்கிடப்படும் .

தவணைத் தொகை எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கமாக திருப்பி தரப்படமாட்டாது .

தவணைத்தொகை சரிவர கட்டாமல் இடையில் நிறுத்தி விடும் உறுப்பினர்களுக்குத் திட்ட முடிவு காலத்தில் அன்பளிப்பு பொருளுக்கான கிரயத்தை கழித்துக் கொண்டு மீதித் தொகைக்கு தங்க நகைகள் வழங்கப்படும் . இதற்கு சேதாரம் மற்றும் செய்கூலி இல்லை என்ற சலுகை பொருந்தாது .

DD , MO , NEFT, RTGS, காசோலை மூலம் பணம் செலுத்துபவர்கள் Mangal and Mangal என்ற பெயரில் செலுத்த வேண்டும் . செலுத்தும்போது சீட்டுப் பிரிவு , உறுப்பினர் எண் , பெயர் மற்றும் முழு முகவரியை எழுதி அனுப்ப வேண்டும் .

RTGS மூலம் பணம் செலுத்துபவர்கள் State Bank Of India, Trichy Town Branch Account Number: 32037187397, RTGS / IFS Code: SBIN0001312 இந்த கணக்கில் பணம் செலுத்தியவுடன் தங்களது சீட்டுப் பிரிவு , உறுப்பினர் எண் மற்றும் பெயரை சீட்டுப் பிரிவில் தொலைபேசி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ தெரியப்படுத்தவும்.

இதில் குறிப்பிட்டுள்ள சலுகைகள் தவிர வேறு சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.

நிபந்தனைகள் நிர்வாகத்தின் மாறுதலுக்குட்பட்டது. All disputes are subject to the jurisdiction of the competent courts in Tiruchirappalli.